போனவார நம் சந்தைகள் வர்த்தகர்களுக்கும், முதலீட்டாளார்களுக்கும் ஒரு ஆர்வம் இல்லாத வாரமாகவே இருந்தது எனலாம். சர்வதேச சந்தைகள் எல்லாம் உயர்ந்தபோதும் நம் சந்தைகள் ஒரு ஆர்வம் இல்லாமலே நகர்ந்தது.போனவார நம் சந்தைகள் தற்போதைய Resistence Level 5182ஐ தொட்டு திரும்பியதும், தனது தற்போதைய Support Levelஆன 5051ஐ மீண்டும் உறுதி செய்து இருப்பதும், நம் தேசிய சந்தை ஏதேனும் ஒரு பக்கம் நகர முயற்சிக்கிறது என நினைக்கிறேன்.
சர்வதேச சந்தைகளை பின்பற்றாமல் நம் சந்தைகள் தனி ஆவர்த்தனம் வாசிக்கும் நிலை இருக்கும்போது சந்தையின் போக்கை கணிப்பது கடினம். சந்தைகள் Operator கைகளில் சிக்கியிருப்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும். தற்போதைய நிலையில் தின முதலீட்டாளர்களோ அல்லது குறுகிய கால முதலீட்டாளர்களோ பங்குகளை தேர்ந்தெடுக்கும்போது மிகவும் கவனம் தேவை.
பார்ப்போம் இந்த வாரம் நம் சந்தைகள் என்ன செய்கிறது என்று...

.jpg)